எண்ணில் அடங்கா
எண்ண அலைகளை
தன்னுள் தொலையாமல்
தட்டு மெட்டோடு
தவிப்பு தீர- திணறாமல்
தன்மையாய் தருவது தான் கவியா?
இல்லை
வளைந்து நெளிந்த
வழியில் சென்று
மூடுபனி போர்வைக்குள்
மறைந்த வெள்ளை தாள்
விடையை தேடி
தேடிய விடைக்கு வினவும் தேடி
வியப்பில் ஆழ்ந்து
வார்த்தை இன்றி நிற்பது கவியா?